ரிஷாட் பதியுதீனின் தொலைபேசி உரையாடல் தொடர்பில் சஜித்திடம் வாக்குமூலம் பதிவு!

ரிஷாட் பதியுதீனின் தொலைபேசி உரையாடல் தொடர்பில் சஜித்திடம் வாக்குமூலம் பதிவு!


பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதினுடன் மேற்கொண்ட தொலைபோசி உரையாடல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.


எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் இல்லத்திற்கு சென்று இவ்வாறு சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.


$ads={2}


முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை கைது செய்யுமாறு நீதிமன்றம் அறிவித்தமையை தொடர்ந்து சஜித் பிரேமதாவுடன் அவர் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டாரா இல்லையா என்பது தொடர்பிலேயே இன்றைய தினம் சாட்சிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்துடன் எதிர்கட்சி தலைவரிடம் எதிர்கட்சியில் உள்ள உறுப்பினர் ஒருவர் உரையாடல் மேற்கொள்வது தவறு என அரசாங்கம் சிந்திப்பதானது நகைப்புக்குரிய விடயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post