கம்பஹா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்ட பெண்ணுக்கு எதிர்பாராத விதமாக மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையிலேயே கண்டுபிடிக்கப்பட்டார் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
அவர் இலங்கையில் சமூகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நோயாளியாகும் என விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றியமைக்கான காரணம் கண்டுபிடிக்க முடியாத முதலாவது கொரோனா நோயாளி அவர் என விசேட வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறானா நோயாளிகள் மேலும் சமூகத்தில் அடையாளம் காணுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனால் முடிந்தஅளவு சமூகத்துடன் அதிகம் தொடர்புப்படுவதனை தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.