பாதையோர வியாபரங்களுக்கு தடை!!!

பாதையோர வியாபரங்களுக்கு தடை!!!


தலவாக்கலை - லிந்துலை நகரசபைக்கு உட்பட்ட நகரங்களில் நடைபாதை வியாபாரங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நகரங்களில் காணப்படும் வர்த்தக நிலையங்களுக்கு வெளிப்பிரதேசத்தில் இருந்து வருகை தரும் வர்த்தகர்களுக்கு கடைகளை வாடைகக்கோ , வியாபார நோக்கத்திற்காகவோ விடக்குடாதென லிந்துலை நகசபை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

$ads={2}

நாட்டில் நிலவும் கொரோனா பரவல் காரணமாக எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழமைப்போல் வழங்க திட்டமிட்டிருந்த நடைப்பாதை வியாபார நடவடிக்கைகள் இவ்வருடம் நிறுத்தப்படவுள்ளதாகவும் நகரபிதா தெரிவித்துள்ளார்.

எனவே, இவ்வருடம் தலவாக்கலை – லிந்துலை நகரங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எவ்வித நடைப்பாதை வியாபாரங்களையும் நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என நகரபிதா தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post