பொலிஸ் மா அதிபரின் பொதுமக்களுக்கான வேண்டுகோள்!

பொலிஸ் மா அதிபரின் பொதுமக்களுக்கான வேண்டுகோள்!


இலங்கை முழுவதும் கொரோனா தொற்றாளர்களுக்கு உட்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும், மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாத பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பின்பற்ற வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


அத்துடன், இன்றைய தினம் கம்பஹா, நீர்கொழும்பு காவல் துறை அதிகாரங்களுக்குட்பட்ட 19 பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு சில மணித்தியாலங்களுக்கு தளர்த்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.


எனினும், நாளை மற்றும் நாளை மறுதினம் குறித்த தளர்வு காலம் அமுலுக்கு வராது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post