கொழும்பை விட்டு வெளியேறியவர்களுக்கு நடக்கப்போவது இது தான் - சமூகவலைதளங்களின் உதவியுடன் ஒவ்வொருவரும் இனங்காணப்படுவர்!

கொழும்பை விட்டு வெளியேறியவர்களுக்கு நடக்கப்போவது இது தான் - சமூகவலைதளங்களின் உதவியுடன் ஒவ்வொருவரும் இனங்காணப்படுவர்!


ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் மேல் மாகாணத்திலிருந்து பிற மாகாணங்களுக்கு சென்றதாக சமூக ஊடகங்களில்பதிவிட்டவர்களைக் கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு விதித்த பின்னர் மேல் மாகாணத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் சிறப்புஅறிவிப்பையும் வெளியிட்டார்.

கடந்த 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், மேல் மாகாணத்தில் 112 பொலிஸ்பிரிவுகளும், கொல்லுப்பிட்டிய் பகுதியில் 05 பொலிஸ் பிரிவுகளிலிருந்து வெளி மாகாணங்களுக்கு சென்றவர்கள் அந்தந்த இடங்களில் தனிமைபடுத்தப்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.


$ads={2}

அவ்வாறு வெளியேறியவர்கள் தற்போது ஹோட்டல், சுற்றுலா ரிசார்ட் அல்லது ஒரு வீட்டில் இருப்பார்களாயின், அவர்கள் அங்கேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தபடுவார்கள் என்று பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

மேல் மாகாணத்திற்கு தனிமைப்படுத்தப்படாமல் திரும்பி வருபவர்கள் ஒரு சிறப்பு முறையின்படி அடையாளம் காணப்படுவார்கள் என்றும்அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post