கொரொனா தொற்றின் முதல் சுற்று பொதுத் தேர்தலுக்கு; இரண்டாம் சுற்று அரசியலமைப்புக்கு!

கொரொனா தொற்றின் முதல் சுற்று பொதுத் தேர்தலுக்கு; இரண்டாம் சுற்று அரசியலமைப்புக்கு!

கொரொனா வைரஸ் தாக்கத்தின் முதல் சுற்றினை பொதுத் தேர்தலுக்காக பயன்படுத்திய அரசாங்கம் இரண்டாம் சுற்றினை அரசியமைப்பு திருத்தத்தை நிறைவேற்ற பயன்படுத்துகிறது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையை கேந்திரமாக கொண்டு  பரலவடைந்துள்ள கொரொனா வைரஸ் தொற்று காரணமாவே நாட்டில் கூலி பெறுபவர்களின் வாழ்க்கை பெறும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. தற்போதும் பல பகுதிகளுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும், சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

$ads={2}

அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மை கொரொனா வைரஸ் இரண்டாம் சுற்றாக பரலவடைய முக்கிய காரணியாக உள்ளது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும், தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் நிபந்தனைகளற்ற ஒத்துழைப்பினை எதிர்க்கட்சியில் இருந்துக் கொண்டு வழங்குகிறோம் என ஆரம்பத்தில் இருந்து  குறிப்பிட்டோம்.

கொரொனா வைரஸ் பரவல் ஆரம்பத்தில் பரவலடைந்த காலத்தில் அரசாங்கம் பொதுத்தேர்தலை வெற்றிக் கொள்ளும் நோக்கில் அரசியல்வாதிகள் ஊடாக மக்களுக்கு 5,000 ரூபாவை வழங்கியது. 

தற்போது தேர்தல் ஏதும் கிடையாது. ஆனால் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையை கேந்திரமாக கொண்டு பரவலடைந்துள்ள கொரொனா வைரஸ் தொற்றினால் பல பிரதேசங்களுக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள  பிரதேசத்தில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post