கடுமையாக்கப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு! -பொலிஸ்

கடுமையாக்கப்படவுள்ள ஊரடங்கு உத்தரவு! -பொலிஸ்


ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் எதிர்வரும் சில தினங்களுக்கு ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


கொழும்பில் இன்றைய தினம் (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.


அத்துடன் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட நகரங்களில் எதிர்வரும் 13,14 மற்றும் 15ஆம் திகதி ஆகிய தினங்களில் மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய சேவை நிறுவனங்கள் மூடப்படும் எனவும் அறிவித்தார்.


அத்துடன், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மாத்திரமின்றி நாட்டின் ஏனைய பகுதிகளில் வசிப்பவர்களும் தங்களுடைய பிரயாணங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post