நுகேகொடை வார சந்தை மறுஅறிவித்தல் வரும்வரை பூட்டு!

நுகேகொடை வார சந்தை மறுஅறிவித்தல் வரும்வரை பூட்டு!


நுகேகொடை மீன் சந்தைக்குள் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.


இந்த கொரோனா தொற்றாளர்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு PCR பரிசோதனை நடத்தப்பட உள்ளது என குறித்த அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


$ads={2}


இதன் காரணமாக மறு அறிவித்தல் வரும் வரை நுகேகொடை வார சந்தையை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகேகொடை சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் கூறியுள்ளது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post