நாடு முழுமையாக முடக்கப்படுமா? ஜனாதிபதியின் அதிரடி முடிவு!!

நாடு முழுமையாக முடக்கப்படுமா? ஜனாதிபதியின் அதிரடி முடிவு!!

நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்த தீர்மானமும் எடுக்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
$ads={2}
இந்த தீர்மானத்தை அமைச்சரவை சந்திப்பின்போது ஜனாதிபதி தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை நேற்றுமுன்தினம் நடந்தது.

இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் அதிவேக அச்சுறுத்தல் குறித்து நீண்டநேரம் பேசப்பட்டிருக்கிறது.
$ads={2}
நாட்டை முழுமையாக முடக்குவது பற்றி அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதியை வினவிய சந்தர்ப்பத்தில் அவர் மேற்கண்டவாறு பதிலளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டை முழுமையாக மூடுவதற்குப் பதிலாக தொற்று அதிகமாக உள்ள இடங்களை மாத்திரம் அடையாளங் கண்டு முடக்குவதே தற்போதைய தீர்மானம் எனவும் ஜனாதிபதி அமைச்சரவையில் தெளிவுபடுத்தியிருக்கின்றார்.

இதேவேளை முன்னாள் அமைச்சரான பஸில் ராஜபக்ச தலைமையில் விசேட கூட்டமொன்று அலரிமாளிகையில் இடம்பெற்றிருப்பதுடன், அதில் கொழும்பில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துவருகின்றமை குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.