கைது செய்யப்பட்ட ரிஷாட் கோட்டை நீதவான் நீதிமன்று முன்னிலையில் ஆஜர்!

கைது செய்யப்பட்ட ரிஷாட் கோட்டை நீதவான் நீதிமன்று முன்னிலையில் ஆஜர்!


இன்று (19) காலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமறைவாக உதவிய குற்றச்சாட்டில் பெண் வைத்தியர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


மேலும் ரிஷாட் பதியுதீனை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிடுவதற்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னர், அவர் தொடர்பில் கண்காணிக்குமாறு சட்டமா அதிபர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியிருந்ததாக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் இணைப்பதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், சற்றுமுன்னர் ரிஷாட் பதியுதீனை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post