ரிஷாட் எனும் நாமம் உச்சரிக்காமல் அரசு மற்றும் பாராளுமன்றம் இயங்க முடியாத நிலை! எஸ்.எம்.எம் முஷாரப் நாடாளுமன்றில் தெரிவிப்பு!

ரிஷாட் எனும் நாமம் உச்சரிக்காமல் அரசு மற்றும் பாராளுமன்றம் இயங்க முடியாத நிலை! எஸ்.எம்.எம் முஷாரப் நாடாளுமன்றில் தெரிவிப்பு!


PCR பரிசோதனையைக் காரணம் காட்டி ரிஷாட் பதியுதீனின் பாராளுமன்றம் வரும் உரிமை கூட மறுக்கப்பட்டுவிட்டதாக குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம் முஷாரப், ரிஷாட் என்ற பெயரை உச்சரிக்காது அரச இயந்திரம் இயங்க முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (20) இடம்பெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான கட்டளை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

எமது கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைதை ஏதோ சர்வதேச பயங்கரவாதியை பிடித்ததுபோல் சித்திரிக்கின்றனர். ரிஷாட் என்ற பெயரை உச்சரிக்காது அரச இயந்திரம் இயங்கமுடியாத நிலையில் உள்ளது. பாராளுமன்றமும் அரசும் ரிஷாட் என்ற ஒரு பெயரைச் சுற்றியே இயங்குகின்றது. நாட்டுத்தலைவரின் பெயர் உச்சரிக்கப்படுவதனைவிடவும் ரிஷாட் பதியுதீன் என்ற பெயரே அதிகம் உச்சரிக்கப்படுகின்றது. ரிஷாட் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.

$ads={2}

அவர் கைதானாலும் பாராளுமன்றம் வருவதற்கான உரிமை உள்ளது. அதற்கான கோரிக்கையையும் அவர் முன்வைத்தார். அதற்கான அனுமதியை சபாநாயகர் வழங்கிய போதும் றிஷாத்துக்கு PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனக்கூறி பாராளுமன்றம் வருவதற்கான அவரின் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளில் தவறான முடிவுகள் வெளிவருவதனையும்  இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன் என்றார். 


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post