நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 120 பேர் இன்று (20) இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தலில் இருந்த மினுவாங்கொடை கொரோனா தொற்றாளர்கள் 37 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிப் பழகிய 83 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
$ads={2}
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மினுவாங்கொடை கொரோனா கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 2,342 ஆக அதிகரித்துள்ளது.