பேலியகொட கொரோனா கொத்தணி பரவலுக்கு காரணத்தை வெளியிட்டார் பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!

பேலியகொட கொரோனா கொத்தணி பரவலுக்கு காரணத்தை வெளியிட்டார் பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!


பணப் புலக்கம் அதிகளவில் இடம்பெற்றமையே, பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தணி பரவலுக்கு காரணமாக இருக்கக்கூடும் என சந்தேகிப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


எனவே, பணப் புலக்கம் தொடர்பில் பொதுமக்கள் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டும் என இன்று (25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.


இதேநேரம், நாட்டில் கொரோனா  தொற்று உறுதியான மேலும் 89 பேர் இன்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.


இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,803 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.


$ads={2}


வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 3,966 ஆக அதிகரித்துள்ளது.


நாட்டில் இதுவரையில் 7,784 பேருக்கு  தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post