ரிஷாட் எங்கே என்று எனக்கு கூறுங்கள்; நான் சென்று பிடிக்கிறேன்! அமைச்சர் சனத் நிஷாந்த கூக்குரல்!

ரிஷாட் எங்கே என்று எனக்கு கூறுங்கள்; நான் சென்று பிடிக்கிறேன்! அமைச்சர் சனத் நிஷாந்த கூக்குரல்!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எங்காவது மறைந்திருந்தால் தனக்கு தகவல் தெரிவிக்குமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


அவர் மேலும் கூறுகையில், ஒருவர் குற்றவாளியாக கருதப்பட்டு அவர் மறைந்திருந்தால், அவரைக் காட்டிக்கொடுப்பது அனைத்து குடிமக்களின் பொறுப்பாகும்


$ads={2}


எனவே, ரிஷாட் பதியுதீன் எங்காவது தங்கியிருந்தால், எனக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், பொலிஸார் அவரைக் கைது செய்யாவிட்டால், நான் அங்கு சென்று அவரை பிடிப்பேன் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


மேலும், யார் அவரை காப்பாற்ற போராடினாலும் ரிஷாட் பதியுதீன் இந்த அரசாங்கத்தின் கீழ் கைது செய்யப்படுவார் என உறுதியாக தெரிவிப்பதாக அவர் கூறினார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post