தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கம்; திடீரென வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கம்; திடீரென வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழ் ராக்கர்ஸ் (Tamilrockers) முடக்கப்படுவதாக அந்த இணையதளம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் ராக்கர்ஸ் எனும் இணையதளம் தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்களை அதிகபட்சம் அன்றைய தினமே இணையதளத்தில் வெளியிடுவதால் மக்கள் பெரும்பாலும் தியேட்டருக்கு செல்லாமலேயே இணையதளத்தில் டவுன்லோட் செய்து பார்த்து வந்தனர்.


இதனால் திரைத்துறையினருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக புகார் எழுந்தது. தமிழ் ராக்கர்ஸின் இந்த அதிரடி ஆக்ஷனுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட எந்த நடிகரும் தப்பவில்லை.


இந்நிலையில், இந்த இணையதளத்தை முடக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு வந்த இந்த முயற்சிகள் அனைத்தும் வீணாகி போயின. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலின் போதும் நடிகர் விஷால் திரைத்துறைக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும் இந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்குவோம் என வாக்குறுதி அளித்து அந்த தலைவர் பதவிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.ஆனால் இந்த பதவிக்காலம் முழுவதும் இணையதளத்தை முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் விஷாலால் முடியவில்லை. 


தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, இயக்குநர் மிஷ்கின் என பலரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை நெருங்கிவிட்டதாகவும் விரைவில் முடக்கும் என தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில் தான் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்குவதாக அந்த இணையதளமே அறிவித்துள்ளது. இதற்கான காரணம் என்னவென தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இந்த அறிவிப்பால் திரைத்துறையினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


ஆனால் பொதுமக்களோ இனி தரம் குறைவான படமாக இருந்தாலும் தியேட்டருக்குத்தான் போகணுமா என கன்னத்தில் கைவைத்தபடி வருத்தத்தில் உள்ளனர். இணையதளவாசிகள் இத்தனை நாள் செய்த சேவைக்கு நன்றி என தமிழ் ராக்கர்ஸுக்கு தெரிவித்து வருகிறார்கள்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post