புதிய அரசியலமைப்பை உருவாக்க பொதுமக்களின் பரிந்துரை கோரியுள்ள அரசு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய அரசியலமைப்பை உருவாக்க பொதுமக்களின் பரிந்துரை கோரியுள்ள அரசு!!


புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக பொதுமக்கள் மத்தியில் இருந்து பரிந்துரைகளைப் பெற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயதுன்னே இதனை அறிவித்துள்ளார்.

இந்நிலையில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வல்லுநர்கள் குழுவுக்கு நவம்பர் 30 அல்லது அதற்கு முன்னர் தங்கள் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சு பொதுமக்களை கோரியுள்ளது.

தமிழ் - சிங்களம் அல்லது ஆங்கில மொழிகளில் A4 தாளில் தட்டச்சு செய்யப்பட்ட சமர்ப்பிப்புகளை அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியாக பொதுமக்கள் அனுப்பமுடியும் என்று நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

$ads={2}

அரசாங்கத்தின் இயல்பு, அடிப்படை உரிமைகள், மொழி, அரசக்கொள்கையின் வழி நடத்தும் கோட்பாடுகள், ஜனாதிபதி, அமைச்சர்கள் அமைச்சரவை, பொது சேவை, சட்டமன்றம், வாக்கெடுப்பு மற்றும் வாக்கெடுப்பு உள்ளிட்ட தேர்தல்கள் அதிகாரப்பரவலாக்கம், அதிகாரப் பகிர்வு, நீதித்துறை, பொதுநிதி, பொதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பிலேயே பொதுமக்களிடம் இருந்து புதிய அரசியலமைப்புக்கான பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தமது பரிந்துரைகளை அனுப்பவேண்டிய முகவரி:

Room No. 32,
(Block 02) BMICH,
Bauddhaloka Mawatha,
Colombo 07.

மின்னஞ்சல் முகவரி:

expertscommpublic@yahoo.com

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.