பொலிஸாரின் கோரிக்கையை மீறும் பொதுமக்கள்; மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார்!

பொலிஸாரின் கோரிக்கையை மீறும் பொதுமக்கள்; மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார்!

பொலிஸாரின் கோரிக்கையையும் புறக்கணித்து மேல் மாகாணத்தில் இருந்து பலர் ஏனைய மாகாணங்களுக்கு செல்ல தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

எவரும் மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு செல்லவேண்டாம் என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மேல் மாகாணத்தில் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 2ம் திகதி அதிகாலை வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்செய்யப்படவுள்ளது.

$ads={2}

இந்நிலையில், இதனை கருத்திற்கொண்டு பலர் ஏனைய மாகாணங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

எனினும் மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு செல்வதால் அந்த மாகாண மக்களுக்கு சுகாதார அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்று ஏற்கனவே பொலிஸார் அறிவித்திருந்தனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post