களனி புகையிரத பாதையின் இரு பக்கத்திலும் குடியிருப்போருக்கான மகிழ்ச்சி செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

களனி புகையிரத பாதையின் இரு பக்கத்திலும் குடியிருப்போருக்கான மகிழ்ச்சி செய்தி!


களனி புகையிரத தடத்தின் இரு பக்கங்களிலும் சட்டவிரோதமான குடியிருந்தவர்களுக்கு வாழ்ந்தவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் சொந்த வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


அத்துடன், புகையிரத திணைக்களத்துக்குரிய புகையிரத வனப்பாதுகாப்பு பிரதேசங்களில் வாழும் புகையிரத பணியாளர்கள் தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுக்க  நால்வர் அடங்கிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.


புகையிரத திணைக்களத்துக்குரிய 14,000 ஏக்கர் வனப்பாதுகாப்பு பிரதேச நிலப்பரப்பு உள்ளன. இதில் 10 சதவீதமான காணிகள் பல தரப்பினருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கபபட்டுள்ளன. எஞ்சிய காணியின் 80 சதவீதம் பல தரப்பினரால் சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தப்பட்டுள்ளன.


அவர்களில் புகையிரத திணைக்கள ஊழியர்களும், ஒய்வுப்பெற்ற ஊழியர்களும் உள்ளடங்குகின்றனர். வீடமைப்பு மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்தல், விவசாய மற்றும்   இதர தேவைகளுக்கு சட்டவிரோதமான முறையில் பயன்படுத்துகின்றனர்.


சட்டவிரோதமாக குறித்த காணிகளை கையகப்படுத்தியுள்ள சில புகையிரத திணைக்கள  ஊழியர்களை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தியுள்ளதுடன், ஒழுக்காற்று நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு ஓய்வூதியமும்  இரத்து செய்யப்பட்டுள்ளன. 


$ads={2}


குறித்த விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க போக்குரவத்து தலைவர் காமினி லொகுகே தலைமையில் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் ஜனக தென்னகோன், காணி விவகார அமைச்சர் எஸ்.எம். சந்ரசேன, நிதி மற்றும் மூலதன சந்தை இராஜாங்க அமைச்சர் ஆகியோரை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.