ரிஷாட் பதியுதீனுடன் நாம் இன மத வேறுபாடின்றி வேலை செய்தோம்! பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன

ரிஷாட் பதியுதீனுடன் நாம் இன மத வேறுபாடின்றி வேலை செய்தோம்! பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன


"அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உட்பட நாங்கள் அனைவரும்
எந்தவொரு இன, மத வேறுபாடும் இன்றி ஒன்றாக வேலை செய்தோம்." என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.

அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது, அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் இணைந்து பணியாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் அமைச்சரும் அவரது குழுவினரும் எந்தவொரு இன, மத வேறுபாடும் இன்றி அவரால் முடிந்த அனைத்தையும் எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி செய்ய உறுதிபூண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூட திறப்பு விழாவில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

"வன்னி மாவட்டம் அல்லது வவுனியா எனக்கு அறிமுகமில்லாத இடம் அல்ல. அக்காலப்பகுதியில் இடம்பெயர்ந்தோருக்கான பொறுப்பதிகாரியாக நான் நியமிக்கப்பட்டேன். அந்த நேரத்தில், மீள்குடியேற்ற அமைச்சர் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆவார். இந்த மாவட்டத்தில் நாங்கள் ஒன்றிணைத்து செயற்பட்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம், எந்தவொரு இன, மத வேறுபாடுகளும் இல்லாமல் அனைவருக்கும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம்.” என்றார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post