ஊரடங்கிற்கு முன் அவசரமாக மேல் மாகாணத்தை விட்டு வெளியே சென்றவர்களுக்கு நடக்கப்போவது இது தான்!

ஊரடங்கிற்கு முன் அவசரமாக மேல் மாகாணத்தை விட்டு வெளியே சென்றவர்களுக்கு நடக்கப்போவது இது தான்!


மேல் மாகாணத்திற்கு மூன்று நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மற்ற மாகாணங்களிலிருந்துபுறப்பட்டவர்களுக்கு அவர்கள் திரும்பும்போது சிறப்பாக அடையாளம் காணப்படுவர் என பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர்டி.ஐ.ஜி. அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


$ads={2}

அடுத்த திங்கட்கிழமை ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் திரும்பும் அனைத்து வீதிகளை உள்ளடக்கும் வகையில் சிறப்புநடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஊர்டங்கு அறிவிக்கப்பட்டதன் பின்பு மேல் மாகாணத்திலிருந்து சென்றவர்களுக்கு எதிராகதனிமைபடுத்தல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கொழும்பு நகருக்கு வெளியே வைரஸ் பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவைப் பொருட்படுத்தாமல் சில குழுக்கள்செயல்பட்டுள்ளன என்பது தெரிய வந்துள்ளது என்றும் டி.ஐ.ஜி அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தை விட்டு வெளியேறியவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாக டி.ஐ.ஜி அஜித்ரோஹன மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post