ரிஷாடை காப்பாற்ற நான் பதவி துறக்கவில்லை; எம்.பி கபீர் ஹசீம் சாட்சியம்!

ரிஷாடை காப்பாற்ற நான் பதவி துறக்கவில்லை; எம்.பி கபீர் ஹசீம் சாட்சியம்!

ஈஸ்டர் ஞாயிறு தினத் தாக்குதல்களுக்கு பின்னர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவரப்பட்டபோது முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை துறந்தமையானது, அரசாங்கத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையே அன்றி, அது ரிஷாத் பதியுதீனை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்லவென முன்னாள் அமைச்சரும் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கபீர் ஹசீம் தெரிவித்தார்.

$ads={2}

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்றைய முன்தினம் (14) மாலை முதல் விசேட சாட்சியம் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா பிரேரனை அரசாங்கத்துக்கு மிகப் பெரும் அழுத்தமக இருந்ததாக சுட்டிக்காடிய கபீர் ஹசீம், அதனால் அவ்வாறான தீர்மானமொன்றுக்கு வந்ததாக இதன்போது சாட்சியமளித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post