எனது கணவரை கொலை செய்துள்ளார்கள் - மாகந்துரே மதூஷின் இரண்டாவது மனைவி குமுறல்!!

எனது கணவரை கொலை செய்துள்ளார்கள் - மாகந்துரே மதூஷின் இரண்டாவது மனைவி குமுறல்!!

அண்மையில் துப்பாக்கிச் சூட்டில் இறந்த பாதாள உலக தலைவரான மாகந்துரே மதூஷின் இரண்டாவது மனைவியான திலினி நிஷயா, தனது கணவர் திட்டமிட்டு கொல்லப்பட்டார் என்றும், மரணம் குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


மேலும் குறித்த அவரது கணவரின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்துமாறு அவர் ஜனாதிபதியை வேண்டிக்கொண்டுள்ளார்.


$ads={2}


மாகந்துரே மதூஷுக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் உள்ளன என்பதையோ அல்லது துபாயில் ஹோட்டல் மற்றும் வாகன யார்டுகள் இருப்பதையோ தனக்குத் தெரியாது என்றும், மதூஷுக்கு என்ன நடந்த கொடூரம் வேறு யாருக்கும் நடக்காது என்றும் நம்புவதாகவும் அவர் கூறினார்.


மாகந்துரே மதூஷின் உத்தியோகபூர்வ மனைவி நான் அல்ல எனவும் ஆனால் வேறொரு பெயரில் அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.


யூடியூப் சேனலில் ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம அளித்த பேட்டியின் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post