ரிஷாட் பதியுதீனை கைது செய்ய பிடியானை அவசியம் இல்லை; கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தெரிவிப்பு!

ரிஷாட் பதியுதீனை கைது செய்ய பிடியானை அவசியம் இல்லை; கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தெரிவிப்பு!


பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் மேலும் இருவரை பேரை கைது செய்ய பிடியானை கோரியதை கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


குறித்த இந்த கோரிக்கையை குற்றவியல் புலனாய்வுத் துறை முன்வைத்துள்ளது.


மேலும் இந்த மூன்று நபர்களை கைது செய்ய பிடியானை ஒன்று பெறுவது அவசியமில்லை என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது


$ads={2}


முன்னதாக பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதுதீனை கைது செய்ய நீதிமன்றத்தில் இருந்து கைது பிடியானை பெறுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.


2019 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்துகளில் இடம்பெயர்ந்தோரை கொண்டு சென்றதாக முன்னாள் அமைச்சர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post