பரீட்சை மண்டபங்களின் சுகாதார பிரச்சினைகளை தெரிவிக்க கல்வி அமைச்சு துரித இலக்கத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது!!!

பரீட்சை மண்டபங்களின் சுகாதார பிரச்சினைகளை தெரிவிக்க கல்வி அமைச்சு துரித இலக்கத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது!!!


எந்தவொரு காரணத்திற்காகவும் எந்தவொரு பரீட்சை மையத்திலும் மாணவர்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யாத வகையில் அல்லது தேவையான சுகாதார வசதிகள் வழங்கப்படாவிட்டாலும், அவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டாலுமோ உடனடியாக கல்வி அமைச்சின் துரித இலக்கமான 1988 க்கு அழைக்குமாறு கல்வி அமைச்சகம் பொதுமக்களை வேண்டுகின்றது.


$ads={2}

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதால் ஏற்படும் அபாயத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறைகளின் முழு ஆதரவோடு மாணவர்களை பாதுகாப்பாக பரீட்சையில் தோற்ற உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகளுக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களின் முழுமையான ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கும், தேர்வு மைய வளாகத்தில் கிருமி நாசினி மற்றும் பரிசோதனை சுகாதார நடைமுறைகளை மேற்கொள்வதற்கும் அந்தந்த தேர்வு மையங்களின் அதிபர், துணைமுதல்வர் அல்லது நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை ஒக்டோபர் 12 ஆம் திகதி தொடங்கியது. க.பொ.த உயர்தர பரீட்சைகள் நவம்பர் 06 வரை 2648 தேர்வு மையங்களில் நடைபெறும், இந்த ஆண்டு தேர்வுக்காக 362,824 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post