மினுவங்கொட ஆடை நிறுவனத்தில் கடமையாற்றும் வத்தளை, கந்தானை, ஜாஎல, பியகம, கிரிபத்கொட, சபுகஸ்கந்த, பேலியகொட, களனி, கடவத்த, மீகஹவத்த, ராகம மற்றும் மஹபாக பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் தற்போது அப்பகுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு பொலிஸ் தலைமையகம் தனிமைப்படுத்தல் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவின் அடிப்படையில் இன்று (07) மாலை 6.00 மணிக்கு முன்னர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு அவர்களை சமூகம் தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பள்ளிய ஒழுங்கை வாகன தரிப்பிடம் - வத்தளை பொலிஸ் எல்லைப் பகுதி
- கந்தானை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் - கந்தானை பொலிஸ் எல்லைப் பகுதி
- ஜாஎல பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் - ஜாஎல பொலிஸ் எல்லைப் பகுதி
- பியகம பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் - பியகம பொலிஸ் எல்லைப் பகுதி
- கிரிபத்கொட பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் - கிரிபத்கொட பொலிஸ் எல்லைப் பகுதி
- சபுகஸ்கந்த பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் - சபுகஸ்கந்த பொலிஸ் எல்லைப் பகுதி
- தர்மராச மைதானம் - பேலியகொட பொலிஸ் எல்லைப் பகுதி
- களனி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள வாகன தரிப்பிடம் - களனி பொலிஸ் எல்லைப் பகுதி
- கடவத்த நெடுஞ்சாலை பாலத்திற்கு அருகில் உள்ள காலி இடம் - கடவத்த பொலிஸ் எல்லைப் பகுதி
- பெசிலிகா மைதானம் - ராகம பொலிஸ் எல்லைப் பகுதி
- வத்தளை பிரதேச செயலகத்திற்கு அருகில் - மஹபாகே பொலிஸ் எல்லைப் பகுதி
$ads={2}
இதேவேளை குறித்த நிறுவனத்தில் கடைமையாற்றும் ஏனைய பகுதிகளை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று தங்களது தகவல்களை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.