பன்னிப்பிட்டிய பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி!

பன்னிப்பிட்டிய பெண் ஒருவருக்கு கொரோனா உறுதி!


கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிப்பிட்டிய, ரத்மல்கொட பிரதேசத்தில் பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 2ஆம் திகதி குறித்த பெண், தனது கணவருடன் குளியாப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி அவர் சுகயீனமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.


$ads={2}

குளியாப்பிட்டி திருணமத்தில் மணமகன் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அந்த பெண் மற்றும் கணவருக்கு தெரியவந்ததனை தொடர்ந்து 13ஆம் திகதி PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அந்த பெண்ணின் உடலில் மாத்திரம் கொரோனா தொற்றியுள்ளதாக நேற்றைய தினம் PCR பரிசோதனை முடிவுகளுக்கமைய உறுதியாகியுள்ளது.

தொற்றுக்குள்ளான பெண் பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க எல்லாவல தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டிலுள்ள ஏனையவர்கள் சுய சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.