கம்பஹாவில் கொரொனா தொற்றாளர் இனம்காணப்பட்டதை அடுத்து இன்று மாலை எட்டப்பட்ட தீர்மானங்கள்!

கம்பஹாவில் கொரொனா தொற்றாளர் இனம்காணப்பட்டதை அடுத்து இன்று மாலை எட்டப்பட்ட தீர்மானங்கள்!


அனைத்து தனியார் மற்றும் அரச பாடசாலைகளும் நாளை (05) முதல் மீள் அறிவிப்பு வரை மூடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.

மேலும், கொழும்பில் உள்ள அனைத்து மேலதிக வகுப்புகளும் தற்காலிகமாக நாளை முதல் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திவூலபிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட பொலிஸ் பிரிவில் வசிக்கும் அனைத்து துறைமுக அதிகாரசபை ஊழியர்களும் நாளை முதல் மீள் அறிவிப்பு வரும் வரை பணிக்கு சமூகம் அளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அதேநேரம், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்தில் வசிக்கும் எவரும் இருந்தால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று PCR பரிசோதனை செய்துகொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post