வெடிப்பு சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் பலத்த காயம்; மன்னாரில் சம்பவம்!

வெடிப்பு சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் பலத்த காயம்; மன்னாரில் சம்பவம்!


மன்னார் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சிறுவர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இரணை இலுப்பைக்குளம் பகுதியில் இன்று (25) மாலை இடம்பெற்றுள்ளது.


இவ்வெடிப்புச் சம்பவத்தினால் படுகாயமடைந்த இரு சிறுவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


$ads={2}


இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 12 மற்றும் 10 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.


போரின் போது பயன்படுத்தாமல் கைவிட்டுச் சென்ற கைக்குண்டு ஒன்றே இவ்வாறு வெடித்துள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டனர்.


சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மடு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post