சர்வதேச திறமை சான்றிதல் வைத்திருப்போருக்கு கிடைக்கவிருக்கும் சலுகை!

சர்வதேச திறமை சான்றிதல் வைத்திருப்போருக்கு கிடைக்கவிருக்கும் சலுகை!

Yazh news

சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட திறமை சான்றிதலை வைத்துள்ள இலங்கையர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு வழிநடத்து நடைமுறையொன்றை   விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க   அமைச்சுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த புதிய திட்டத்தின் ஊடாக நாட்டுக்கும், வெளிநாட்டில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கும் பாரிய நன்மைகள் கிடைக்கும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச ரிதியில் திறமையான தொழிலாளர்களின் தேவை அதிகரித்துள்ளதாகவும், இதனால் எம்மவர்களில் திறமையா  னவர்களை கொண்டு இந்த வாய்பை பயன்படுத்திக்கொள்ள முடியுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தொழிலாளர் தேவையை அடிப்படையாக கொண்டு   புதிய திட்டங்களை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

$ads={2}

அத்துடன், கிழக்கு ஐரோப்பிய நாடுகளான போலந்து, ருமேனியா போன்ற நாடுகளின் வேலைவாய்ப்புகள் தற்போது இலங்கைக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும்,   ஆகையினால் பொருத்தமான தொழிலாளர் தொகுதியை உருவாக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை, பட்டதாரிகளுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை   அடையாளம் காண்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post