ஷாஃபி சஹாப்தீன் 'திவயின' பத்திரிகை மீது அளித்த புகாரின் விசாரணை முடிவுக்கு வந்தது!

ஷாஃபி சஹாப்தீன் 'திவயின' பத்திரிகை மீது அளித்த புகாரின் விசாரணை முடிவுக்கு வந்தது!


கடந்த காலத்தில் சிங்கள தாய்மார்களுக்கு கருவுறாமை அறுவை சிகிச்சை செய்தததாக குற்றம் சாட்டப்பட்ட குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ பிரிவின் வைத்தியர் ஷாஃபி சஹாப்தீனின் புகார் நிறைவுக்கு வந்தது.

$ads={2}

வைத்தியர் ஷாஃபி சஹாப்தீன், 'திவயின' பத்திரிகையின் இணை ஆசிரியர் மனோஜ் அபேதீர மற்றும் அதன் துணை ஆசிரியர் ஹேமந்த ரண்துனு ஆகியோர் மீது குற்றவியல் புலனாய்வுத்துறைக்கு அளித்த புகாரில், குற்றவியல் புலனாய்வுத்துறை விசாரித்து வந்த நிலையில் அந்த புகார் தொடர்பாக போதுமான ஆதாரங்கள் இல்லாததால் குறித்த விசாரணையை முடிவுக்கு கொண்டுவந்தது.


கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி அன்று 'திவயின' பத்திரிகையில் 'சிசேரியனுக்குப் பிறகு - தவ்ஹீத் ஜமாஅத் வைத்தியர் 4,000 சிங்கள பௌத்த தாய்மார்களை கருத்தடை செய்துள்ளார்' எனும் தலைப்பில் வெளியான ஆக்கம் ஒன்றிற்கு எதிராக வைத்தியர் ஷாஃபி சஹாப்தீன், 'திவயின' பத்திரிகைக்கு எதிராக சிஐடியிடம் புகார் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -yazhnews

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post