வைத்தியர் ஷாபி மீது புகார் அளித்த பல தாய்மார்கள் குழந்தை பெற்றெடுப்பு!

வைத்தியர் ஷாபி மீது புகார் அளித்த பல தாய்மார்கள் குழந்தை பெற்றெடுப்பு!


சிங்கள தாய்மார்களுக்கு பலவந்தமாக கருவுறாமை அறுவை சிகிச்சைகள் செய்ததாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி மீது பொலிஸில் புகார் அளித்த பல தாய்மார்கள், இப்போது குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.


800 க்கும் மேற்பட்ட புகார்கள் அளித்திருந்த நிலையில், அவர்களின் 268 புகார்களை இதுவரை பொலிஸார் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


$ads={2}


இந்த 268 தாய்மார்களில், சுமார் 10 தாய்மார்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர், மேலும் தமது புகார்களை வாபஸ் கொள்வதாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.


மேலும் 650 புகார்கள் விசாரிக்கப்பட உள்ள நிலையில், அதில் மேலும் பல தாய்மார்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக அதிகாரபூர்வமற்ற முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


சிங்கள மூலம்: Lankasara.com


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post