பரீட்சையின் போது விடைகளை சொல்லிக் கொடுத்த மேற்பார்வையாளர் கைது!

பரீட்சையின் போது விடைகளை சொல்லிக் கொடுத்த மேற்பார்வையாளர் கைது!


க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் போது  மாணவர் ஒருவருக்கு விடைகளை எழுதுவதற்கு மோசடியாக உதவி செய்த குற்றச்சாட்டில் பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வாத்துவ பகுதியில் இருக்கும் பாடசாலை ஒன்றிலேயே இவ்வாறு குறித்த மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

$ads={2}

பரீட்சை ஆணையர் நாயகம் சனத் பூஜிதவுக்கு தகவல் அளித்த பின்னர், குறித்த மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று(17) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post