அமெரிக்க மைக் பொம்பியோ இலங்கைக்கு ஏன் விஜயம் மேற்கொண்டுள்ளார்?

அமெரிக்க மைக் பொம்பியோ இலங்கைக்கு ஏன் விஜயம் மேற்கொண்டுள்ளார்?


சீனாவிற்கு எதிரான கூட்டணியை ஏற்படுத்துவதற்காகவே மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் என முன்னாள் இராஜ தந்திரி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.


சீனாவிற்கு எதிராக இலங்கை அமெரிக்காவுடன் இணைவதற்கான அழுத்தங்களை கொடுப்பதே இந்த விஜயத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.


$ads={2}


சீனாவிற்கு எதிரான கூட்டணியை ஏற்படுத்துவது குறித்து மைக் பொம்பியோ முன்னர் அறிவித்துள்ளார் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அமெரிக்காவின் புதிய வெளிவிவகாரக் கொள்கையை அறிவித்த பின்னரே அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சரும் தமது சுறறுப்பயணத்தினை ஆரம்பித்துள்ளனர் என தமரா தெரிவித்துள்ளார்.-yazhnews


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post