கல்கிஸ்ஸையில் கொரோனா தொற்றாளர் - கொழும்பு புத்தக கண்காட்சிக்கும் சென்றுள்ளார் !!!

கல்கிஸ்ஸையில் கொரோனா தொற்றாளர் - கொழும்பு புத்தக கண்காட்சிக்கும் சென்றுள்ளார் !!!


கல்கிஸ்ஸை உள்ள படோவிட்ட பிரதேசத்தில் ஒரு வருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டிள்ளது.

குறித்த கொரோமா தொற்றாளர் மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையின் ஊழியராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரஅதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மையில் இக்கோரோனா தொற்றாளர் கொல்லுபிட்டியில் உள்ள ஆடை தொழிற்சாலையின் தலைமை அலுவலகத்திற்குசென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் செப்டம்பர் 27 ஆம் திகதி கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டதாகவும் கூறப்படுகிறது.

இவரின் மனைவி ஒரு டாக்டராக அடையாளம் காணப்பட்டு மகப்பேறு விடுப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நபர் இரவனிலயில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர், அதே சமயத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலில் வைக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post