கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பரீட்சை இன்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பரீட்சை இன்று!

2020ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று (11) இடம்பெறவுள்ளது.

புலமைப்பரிசில் தேர்வுக்கு இம்முறை 331,694 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு சிங்கள மொழி மூல 248,072 மாணவர்களும், தமிழ் மொழி மூல 83,622 மாணவர்களும் தோற்றுகின்றனர்.

$ads={2}

கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கு தேர்வுக்கு அமர தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்தார்.

சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கமைய இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கம்பஹா மாவட்ட மாணவர்களுக்கு பரீட்சை நிலையங்களுக்கு செல்ல தேவையான போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.