அரசாங்கத்துடன் இணையும் எண்ணம் இல்லை! ரிஷாட் பதியூதீன் திட்டவட்டம்!

அரசாங்கத்துடன் இணையும் எண்ணம் இல்லை! ரிஷாட் பதியூதீன் திட்டவட்டம்!


அரசாங்கத்துடன் இணையும் எந்த எண்ணமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற குழு அறையில் நேற்றைய முன்தினம் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.


மகிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்ற 52 நாள் அரசாங்கத்தில் கூட இணையாது ரணில் விக்ரமசிங்கவுடன் இருந்ததாகவும் தற்போதைய சந்தர்ப்பத்தில் சஜித் பிரேமதாசவுடன் ஐக்கிய மக்கள் சக்தியில் தொடர்ந்தும் இருக்க போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக தனது சகோதரருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டாலும் அதனை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள் எதுவும் இல்லை எனவும், அப்படியான சாட்சியங்கள் இருக்குமாயின் தன்னையும் தனது சகோதரரையும் கைது செய்வதில் எந்த தடையும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தான் அரசாங்கத்துடன் இணைய போவதாகவும், இனவாத தலைவர்கள் எதிர்காலத்தில் அரசாங்கத்தில் இணைந்து கொள்வார்கள் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடக சந்திப்பொன்றில் கூறியிருந்தமை குறித்து ரிஷாட் பதியூதீன் கடும் கவலையை வெளியிட்டதுடன் திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றம் சுமத்தியுள்ளார்.


இந்த கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சாட்சியங்கள் இல்லாவிட்டால் சந்தேகநபர் ஒருவரை விடுதலை செய்வதை பிரச்சினையாக தான் காணவில்லை எனக் கூறியுள்ளார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post