அரசாங்க தகவல் திணைக்களம் அதன் இரு பிரிவுகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை!

அரசாங்க தகவல் திணைக்களம் அதன் இரு பிரிவுகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை!


அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் வளாகத்தில் கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


இதன்படி, குறித்த நடவடிக்கைகள், கொழும்பு மாநகர சபையினால் இன்றைய தினம் (18) மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


திணைக்களம் மற்றும் அமைச்சின் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருதியும், ஊடகவியலாளர்கள் மற்றும் அமைச்சர்களின் பாதுகாப்புக் கருதியும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது


குறித்த நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைகளை, 24 மணித்தியாலமும்  தடையின்றி வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


$ads={2}


இந்நிலையில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடக அடையாள அட்டை வழங்கும் பிரிவு மற்றும் அரச வெளியீட்டு பணியகத்தின் அரசாங்க தகவல் திணைக்கள விற்பனை பிரிவு ஆகியன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, குறித்த இரு பிரிவுகளும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post