குருநாகல் வர்த்தகர்களுக்கு விசேட அறிவித்தல்!

குருநாகல் வர்த்தகர்களுக்கு விசேட அறிவித்தல்!

குருநாகல் நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு குருநாகல் நகர சபைத் தலைவர் துஷார சஜ்ஜீவ விதாரண தெரிவித்துள்ளார்.

குருநாகல் சபை ஊழியர்கள் ஆறுபேர் உள்ளிட்ட இரண்டு மீன் வியாபாரிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதையடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குருநாகல் நகர சபை ஊடாக மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளிலேயே, அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

$ads={2}

குருநாகல் வில்கொடை பகுதியில்,  தொழிலாளர் குடியிறுப்பில் வசிக்கும் 17 குருநாகல் நகர சபை ஊழியர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, அவர்களில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குருநாகல் வில்கொட பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரொனாவை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post