தேசிய பாரம்பரிய தலமாக பட்டியலிட அரசினால் பரிசீலனை செய்யப்பட்டுவரும் ஸ்தலம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேசிய பாரம்பரிய தலமாக பட்டியலிட அரசினால் பரிசீலனை செய்யப்பட்டுவரும் ஸ்தலம்!


பதுளை மாவட்டம் தெமோதரயில் உள்ள ஒன்பது வளைவுகளைக் கொண்ட பாலத்தை (Nine Arches Bridge) இலங்கையின் உள்நாட்டில் தேசிய பாரம்பரிய தலமாக பட்டியலிடுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தேசிய மரபுரிமைகள், இசை கலை, கிராமிய கலை ஊக்குவிப்பு விவகார இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

"வானத்தில் பாலம்" என்றும் அழைக்கப்படும் இது இலங்கையில் காலனித்துவ கால ரயில்வே கட்டுமானத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும்.

ஒன்பது வளைவுகள் கொண்ட பாலம் அடுத்த ஆண்டு அதன் நூற்றாண்டு விழாவைக் காண இருப்பதால் அதனைச் சிறப்பாக அளவில் நினைவுகூர வேண்டும் என அமைச்சர் விதுரா விக்ரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த இடத்தை தேசிய பாரம்பரிய தளமாக அறிவிப்பதன் மூலம் இதனை வரலாற்று மைல்கல்லை நினைவுகூர வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட நம்பிக்கை என்று விக்ரமநாயக்க கூறினார்.

$ads={2}

குறித்த ஒன்பது வளைவுகள் கொண்ட பாலம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான இடம் என்பதுடன் இந்த இடம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் உள்ள மேலும் சில தனித்துவமான சுற்றுலாத் தளங்களின் பட்டியலைத் தொகுத்து அறிக்கை சமர்ப்பிக்க ஆலோசனைக் குழுவை நியமிக்கும் பணியிலும் அமைச்சு ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் தேசிய பாரம்பரிய தளங்களாக அறிவிக்கப்பட்ட இடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை பாதுகாப்பதற்கு மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆலோசிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.