ரிஷாட் பதியுதீனுக்கோ அவரது சகாக்களுக்கோ கருணை காட்ட மாட்டேன்! - கமல் குணரத்ன

ரிஷாட் பதியுதீனுக்கோ அவரது சகாக்களுக்கோ கருணை காட்ட மாட்டேன்! - கமல் குணரத்ன


ரிஷாட் பதியுதீனை கைது செய்ய சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு சிறிது அவகாசம் வழங்குமாறு பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.


இந்த விவகாரத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு செயலாளர் உட்பட பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சு இலக்கு வைத்து மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


$ads={2}


மக்களின் கவலைகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், இந்த கைதுகளை மேற்கொள்வதில் பொலிஸார் பின்பற்ற வேண்டிய ஒரு வழிமுறை உள்ளது என கூறினார்.


ரிஷாட் பதியுதீனிடம் இருந்து வாக்குமூலம ஒன்றினை பெற்றுக்கொண்டு அவரை CIDயினர் கைது செய்ய திட்டமிட்டிருந்த போதும் துரதிஷ்டவசமாக, அந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி ஊடகங்கள் மூலம் பொதுமக்கள் தெரிந்துகொண்டனர்.


இருப்பினும், அவர் கைது செய்யப்படவுள்ளதாக செய்தி வெளியானதும், அவர் தலைமறைவாகி விட்டார் என கமல் குணரத்ன தெரிவித்தார்.


இப்போது அவரது சட்டத்தரணிகள் ரிட் விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளனர் எவ்வாறாயினும் ரிஷாட் பதியுதீன் விரைவில் கைது செய்யப்படுவார் என அவர் உறுதியளித்தார்.


மேலும் பதியுதீன் அல்லது அவரது கூட்டாளிகளுக்கு எந்த கருணையும் காட்ட தாங்கள் விரும்பவில்லை என தெரிவித்த கமல் குணரத்ன பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவரைக் கண்டுபிடிப்போம் என்றும் குறிப்பிட்டார்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post