ஹொரவபொத்தானையில் பெண் ஒருவரை கத்தியால் குத்திய நபருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

ஹொரவபொத்தானையில் பெண் ஒருவரை கத்தியால் குத்திய நபருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

ஹொரவபொத்தானை நகரிலுள்ள கடன் வழங்கும் நிதி நிறுவனமொன்றில் வைத்து 3 பிள்ளைகளின் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
$ads={2}
கெப்பித்திகொல்லாவ நீதிமன்ற நீதவான் ஹர்ஷன த அல்விஸ் முன்னிலையில் சந்தேகநபரை நேற்று (27) மாலை ஆஜர்படுத்தியபோதே, இவ்விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஹொரவபொத்தானை நகரிலுள்ள கடன் வழங்கும் நிதி நிறுவனமொன்றில் வைத்து நேற்று முன்தினம் (26) தனது கணவருடன் முச்சக்கரவண்டியில் வருகை தந்து கணவருக்கு முகக்கவசம் இல்லாதபோது குறித்த பெண் முச்சக்கரவண்டிக்குள் இருந்துள்ளார். இதன்போது, குறித்த பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த சந்தேகநபரை கைது செய்து விசாரணை செய்தபோது தன்னுடன் திருட்டுத்தனமாக பழகி தன்னை ஏமாற்றியதாகவும், அக்கோபத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாகவும் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

-முஹம்மட் ஹாசில் (யாழ் நியூஸ் செய்தியாளர்)

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post