முகக்கவசம் அணியாதோருக்கு பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள் செய்த செயல்!

முகக்கவசம் அணியாதோருக்கு பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள் செய்த செயல்!


முகக்கவசம் அணியாதோரை மடக்கிப்பிடித்து எச்சரிக்கும் நடவடிக்கைகளை பொலிஸாரும், சுகாதார அதிகாரிகளும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, நகரசபை என்பன இணைந்து நேற்று (13) முதல் முகக்கவசம் அணியாதோரை கண்டுப்பிடிக்கும் பாரிய நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.


$ads={2}


இத்தேடுதலின் போது முகக்கவசம் அணியாது பயணம் செய்த பெரும் எண்ணிக்கையிலான வாகன சாரதிகள் சிக்கியுள்ளனர்.


கண்டுபிடிக்கப்பட்ட முகக்கவசம் அணியாதோர் எச்சரிக்கப்பட்டதுடன், விரைவில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி, காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல். நஸீர்தீன் உட்பட பொது சுகாதார பரிசோதகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post