பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான கல்வி அமைச்சின் முடிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான கல்வி அமைச்சின் முடிவு!

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தாமதமடையும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ. பெரேரா தேசிய செய்திப் பத்திரிகை ஒன்றிற்கு
தெரிவித்துள்ளார்.

இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை முடிந்து மீண்டும் நவம்பர் 9ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிக்க திட்டமிட்டிருப்பினும் தற்போது பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக உரிய திகதியில் பாடசாலைகளை மீள திறக்க முடியாது போகும் என அவர் தெரிவித்துள்ளார்.

$ads={2}

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக சுகாதார அதிகாரிகளிடம் பரிந்துரைகளை கேட்டுள்ளதாகவும் சுகாதார பரிந்துரைகளின் அடிப்படையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தாமதடையும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

122 பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு மாணவர்களும் இத்தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

மாணவர்களின் செயற்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதிருக்க மீண்டும் தொலைக்கல்வி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்திய வகையில் அரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வசதிகள் குறைந்த கிராமிய பிரதேச மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்கும் வகையில் விசேட வேலைத் திட்டத்தை தயாரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒக்டோபர் 9ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவிருந்த போதிலும் கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறையை ஒக்டோபர் 5ஆம் திகதி வழங்கப்பட்டது.

உயர் தரப்பரீட்சை முடிவடைந்த்தும் மூன்றாம் தவணை நவம்பர் 9ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 23ஆம் திகதி வரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,

-teachmore.lk

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.