சிலாபத்தில் பாடசாலை மாணவருக்கு கொரோனா !!

சிலாபத்தில் பாடசாலை மாணவருக்கு கொரோனா !!


சிலாபம் பிரதேசத்தில் பாடசாலை மாணவனுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

17 வயதான ஆராச்சிக்கட்டு பிரதேசத்தை சேர்ந்த இந்த மாணவன் இம்முறை உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார்.


$ads={2}

இந்த மாணவனுக்கு கொரோனா வைரஸ் எப்படி தொற்றியது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. மாணவன் சிலாபம் நகரில் நடத்தப்படும் சில தனியார் பகுதி நேர வகுப்புகளிலும் கலந்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு உள்ளான மாணவன் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவரது குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post