கொழும்பில் மட்டும் 61 கொரோனா தொற்றாளர்கள்!!

கொழும்பில் மட்டும் 61 கொரோனா தொற்றாளர்கள்!!


கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் மாத்திரம் 61 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடயாளம் காணப்பட்ட அனைத்து தொற்றாளர்களும் மினுவன்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புகளை உடையவர்கள் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். 

மினுவாங்கொட கொரோனா பரவலினை தொடர்ந்து கொழும்பு நகராட்சி மன்றத்தின் (CMC) எல்லைக்குள் மொத்தம் 06 கொரோனா வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இன்று 250 முதல் 300 PCR சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக CMC தலைமை மருத்துவ அதிகாரி (MOH) வைத்தியர் ருவன் விஜயமுனி

CMC எல்லைக்குள் இருந்து ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட குழுக்களில் இருந்து பல நபர்கள் PCR சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பின் யூனியன் பிளேஸில் உள்ள ஒரு சொகுசு வீட்டு வளாகத்தில் வசிப்பவர்கள் இன்று PCR சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று டாக்டர் விஜயமுனி மேலும் தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post