கொழும்பு கோட்டை பொலிஸ் அதிகாரியொருவருக்கு கொரோனா தொற்று - கட்டுநாயக்க தொழிற்சாலையில் மேலும் 60 நபர்களுக்கு கொரோனா!

கொழும்பு கோட்டை பொலிஸ் அதிகாரியொருவருக்கு கொரோனா தொற்று - கட்டுநாயக்க தொழிற்சாலையில் மேலும் 60 நபர்களுக்கு கொரோனா!


கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொரோனா பரவுவதைத்தடுப்பதற்கான தேசிய செயல் மையம் உறுதிப்படுத்தடித்தியுள்ளது.


$ads={2}

குறித்த அதிகாரி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு கோட்டைகாவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு தனிமைப்படுத்தப்பட்டது.

இதற்கிடையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 60 பேர் இன்று பதிவாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் கட்டுநாயக்கவில் உள்ள இரு ஆடை தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

அதன்படி, கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலைகளில் இருந்து பதிவான மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 259 ஆகஉயர்ந்துள்ளது.

கட்டுநாயக்கவில் உள்ள நெக்ஸ்ட் (NEXT) ஆடைத் தொழிற்சாலையின் 209 ஊழியர்களும், Cheifway தொழிற்சாலையின் 50 ஊழியர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post