சீனாவிடம் இருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்!

சீனாவிடம் இருந்து இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்!


சீனாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடனைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை விரைவில்கையெழுத்திடும் என்று சண்டே டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) மத்திய குழுவின் பொலிட்பீரோ உறுப்பினரும், சிபிசி மத்திய வெளியுறவு ஆணையத்தின் அலுவலகஇயக்குனருமான யாங் ஜீச்சி தலைமையிலான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஏழு பேர் கொண்ட சீன தூதுக்குழு இடையேயானபேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டன.

கடனைப் பயன்படுத்துவதற்கு எந்த தடையும் இன்றி 10 ஆண்டு காலப்பகுதிக்குள் கடனை திருப்பிச் செலுத்தப்படலாம். அதன்படி, COVID சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கடன் பெரும்பாலும் பயன்படுத்தப்படவுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post