சட்டவிரோத 3 சொட்கண் உள்ளிட்ட உள்ளூர் துப்பாக்கிகளுடன் 8 பேர் கைது!

சட்டவிரோத 3 சொட்கண் உள்ளிட்ட உள்ளூர் துப்பாக்கிகளுடன் 8 பேர் கைது!


சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட 10 துப்பாக்கிகளை திருக்கோவில் பொலிசார் கைப்பற்றியதுடன்,  8 பேரைக் கைது செய்துள்ளனர்.


இது தொடர்பில் திருக்கோவில் பொலிஸ் நிலைய விசேட தகவல் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ். ஜயவீர தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அதிரடி தேடுதல் நடவடிக்கையின்போதே, குறித்த துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக, பொலிசார் தெரிவித்தனர்


குறித்த தேடுதல் நடவடிக்கையானது சாகாமம், கஞ்சிகுடியாறு, சின்னத்தோட்டம், தம்பிலுவில், திருக்கோவில், விநாயகபுரம் மற்றும் மண்டானை ஆகிய பிரதேசங்களில் கடந்த 28ஆம், 29ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போதே குறித்த 3 சொட்கண் உள்ளிட்ட உள்ளூர் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும், பொலிசார் குறிப்பிட்டனர்.


$ads={2}


மேலும் பயன்படுத்தக்கூடிய புதிய 6 ரவைகளும் பயன்படுத்திய 11 வெற்று ரவைகளும் ரவைகளுக்கு பயன்படுத்தும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும், பொலிசார் கூறினர்.


குறித்த சந்தேக நபர்களை அக்கரைப்பற்று  நீதிமன்றில் அக்கரைப்பற்று பதில் நீதிபதி இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான் முன்னிலையில் திருக்கோவில் பொலிசார் நேற்றையதினம் ஆஜர்படுத்தினர்.


குறிப்பிட்ட சந்தேக நபர்கள் தாம் செய்ய குற்றத்தினை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தததை அடுத்து,  நீதிமன்றினால் எச்சரிக்கப்பட்டு,  50,000  ரூபா பெறுமதியான பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.


-தினகரன்


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.