குலியாபிட்டியவில் இதுவரை 25 கொரோனா தொற்றாளர்கள்!!

குலியாபிட்டியவில் இதுவரை 25 கொரோனா தொற்றாளர்கள்!!


குலியாபிட்டிய பிரதேசத்தில் மேலும் 14 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, குலியாபிட்டியவில் உறுதிபடுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

குலியாபிட்டியவில் உள்ள ஒரு தேவாலயத்தில் சமீபத்தில் நடந்த திருமண வைபவத்தொல் கலந்து கொண்ட 14 நபர்களே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக குலியாபிட்டிய சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) தெரிவித்தார்.

$ads={2}

பி.சி.ஆர் சோதனைகள் வெள்ளிக்கிழமை (16) நடத்தப்பட்டு முடிவுகள் நேற்று (19) வெளியிடப்பட்டன.

மணமகன் உட்பட பதினொரு நபர்கள் பி.சி.ஆர் சோதனை செய்த பின்னர், குலியாபிட்டியாவில் நான்கு கிராமங்களில் நடமாட்டத்தைகட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கய்யால, ஊருபிட்டி, அன்னருவா மற்றும் பல்லேவெல பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக MOH தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 2 ஆம் தேதி குலியாபிட்டியில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த திருமணத்திலும், அதன்பிறகு மற்றொரு தேவாலயத்தில்நடந்த தேவாலய விழாவிலும் நோயாளிகள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post