20 ஆம் திருத்தச்சட்டத்தில் பிழைகள் - சபாநாயகர் மஹிந்த யாப்பா

20 ஆம் திருத்தச்சட்டத்தில் பிழைகள் - சபாநாயகர் மஹிந்த யாப்பா


அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றில் தெரியபடுத்தினார்.

அந்த சரத்துக்களுக்கு ஒப்புதல் பெறவோ அல்லது மாற்றங்களை மேற்கொள்ளவோ பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


$ads={2}

20 ஆவது திருத்தம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் இன்று சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவில் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டபோதே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20 வது திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலித்து உயர் நீதிமன்றம் ஒக்டோபர் 10 ஆம் திகதி இந்த தீர்மானத்தை மேற்கொண்டு அதனை சபாநாயகருக்கு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.